பாலியியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அவர்களை பாதுகாத்துக்கொள்ள கராத்தே பயிற்சி சென்னையில் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாலியல் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் வெளி உலகுக்கு தெரிந்தவர்கள் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர். பெண்கள் பாலியியல் தொழிலில் ஈடுபடும்போது அடிதடி தகராறு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி உள்ளது.
எனவே இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட பாலியியல் பெண்களுக்கு கராத்தே பயிற்சி அவசியம் என்று சென்னையில் இந்திய சமுதாய நல அமைப்பும், இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர்கள் அமைப்பும் கருதின.
அதன்படி அந்த இரு அமைப்புகளும் சேர்ந்து அமெரிக்காவில் உள்ள உலக பெண்கள் நிதி அமைப்பு உதவியுடன் பாலியல் பெண்களுக்கு 15 நாட்கள் சென்னையில் கராத்தே பயிற்சி அளித்தனர். தினமும் 6 மணி நேரம் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி பெற்ற பெண்கள் கூறுகையில், இந்த கராத்தே பயிற்சியினால் உடலுக்கும் நோய் தாக்காது. எங்களிடம் வாலாட்ட வருபவர்களிடம் இருந்தும் எங்களை காக்க முடியும். இந்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர். பயிற்சி பெற்ற 75 பேர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
அடுத்த கட்டமாக 300 பேருக்கும், அடுத்த கட்டமாக 500 பேருக்கும் கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று இந்திய சமுதாய நல அமைப்பின் செயலாளர் அரிகரன் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக